21 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை வெற்றிகரமாக அகற்றிய இந்திய மருத்துவர்கள்

கடந்த 21 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கி இருந்த பேனா மூடி ஒன்றைத் தெலுங்கானா மாநில மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
அங்குள்ள கரீம் நகரைச் சேர்ந்த 25 வயதான நபர் ஒருவர், ஐந்து வயதாகும்போது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கிவிட்டார்.
இதுகுறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. பிறகு குடும்பத்தார் அதை மறந்துவிட்டனர்.இந்நிலையில், அச்சிறுவன் வளர்ந்த பின்னர் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது உடல் எடையும் குறைந்து போனது.
வேறு சில அவதிகளுக்கும் ஆளான நிலையில், மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இளைஞ்ஞரின் நுரையீரலை ‘ஸ்கேன்’ எடுத்துப் பார்த்தபோது இடது புறத்தில் தொற்று இருப்பதும் அங்கு ஒரு பேனா மூடி இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்கு முன்பு இரு வாரங்களாக அந்த இளைஞ்ர் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. எனவே அறுவை சிகிச்சை மூலம் பேனா மூடியை அகற்றினோம்.
அதன் பிறகு அவர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். அதன் பிறகே பேனா மூடியை தாம் விழுங்கிவிட்டதாக அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும் சில ஆண்டுகள் இந்நிலை நீடித்திருந்தால் அவரது நிலை இன்னும் மோசமாகி இருக்கும் என்று இளைஞருக்கு சிகிச்சை அளித்த நுரையீரல் நிபுணர் சுபகர் நாதெல்லா தெரிவித்துள்ளார்.