வட அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு !

கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி இந்திய தூதரக அதிகாரி ஒருவரின் உடல் வாஷிங்டன் டிசி அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த இந்த மர்ம மரணம் குறித்து உள்ளூர் காவல்துறை மற்றும் ரகசிய சேவை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரது இறப்பு குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியதூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் செப்டம்பர் 18 , 2024 அன்று, மாலையில் உயிரிழந்துள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இவரது குடும்ப உறுப்பினர்களோட தொடர்புக்கொண்டு இவரது உடல் இந்தியா வந்தடைவதற்கான எல்ல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், குடும்பத்தின் தனியுரிமையை கருத்தில் கொண்டு அதிகாரி குறித்தான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிராத்தனைகளும் குடும்பத்துடன் உள்ளன. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் மரணம் குறித்தான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!