எங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார்
திரையுலகில் மிகவும் பிரபலமான தம்பதியர்களாக இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அவர்கள் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக பகிர்ந்துள்ளனர்.
அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” எங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார். இதனால் எங்கள் வீடும் குடும்பமும் அழகாக மாறப்போகிறது. ஆமாம், நாங்கள் மீண்டும் கர்ப்பமாகி விட்டோம்.
உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் பிராத்தனையும் வேண்டும். இப்படிக்கு அன்புடன் அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் கூஃபி” என்று தங்களது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதில் பிரியா அட்லீ தனது பேபி பம்ப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அவரது மனைவி பிரியா பாலிவுட் அளவில் கவனிக்கப்படும் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.






