செய்தி

இலங்கை முப்படைகளுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இந்தியா!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி General Upendra Dwivedi , பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை Major General Aruna Jayasekara கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன் போது, இலங்கைக்கும் Srilanka, இந்தியாவுக்கும் india இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை இரு தரப்பினரும் நினைவுபடுத்தினர்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்திய அரசு அளித்த கணிசமான மற்றும் பன்முக ஆதரவிற்காக இலங்கை ஜனாதிபதி மற்றும் மக்களின் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் மற்றும் பிற நாடுகடந்த குற்றங்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்த வழிவகுத்த இந்திய பாதுகாப்புப் படைகளுடனான செயல்பாட்டு ஒத்துழைப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

மேம்பட்ட தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் பகிர்வு முயற்சிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தை எதிர்கொள்வதில் இலங்கை அரசாங்கமும் மக்களும் காட்டிய வலுவான தேசிய ஒற்றுமை மற்றும் மீள்தன்மையைப் ஜெனரல் திவ்வெதி பாராட்டினார்.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துறைகளில் இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெனரல் திவ்வெதி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் கூட்டாண்மையை உறுதிப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கொழும்பிலுள்ள பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!