சீதையம்மனை வழிபட நுவரெலியா வரவிருந்த இந்திய இராணுவத் தளபதி: கடைசி நேரத்தில் பயணம் இரத்து!
சீரற்ற காலநிலையால் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியின் General Upendra Dwivedi நுவரெலியா விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி மற்றும் அவருடைய பாரியார் சுனிதா திவேதி ஆகியோர் இன்று (08) சீதையம்மன் ஆலயத்துக்கு வருகைதரவிருந்தனர்.
விமானம் மூலம் நுவரெலியா நகர சபை மைதானத்திற்கு வருகை தந்து, அங்கிருந்து விசேட போக்குவரத்து ஏற்பாட்டுடன் சீத்தாஎலிய செல்வதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், சீரற்ற காலநிலையால் விமானத்தை தரையிறக்க முடியாது என்பதால் அவரது விஜயம் ரத்து செய்யப்பட்டது.
எனினும்,இந்திய இராணுவ தளபதி சார்பாக வருகை தந்திருந்த இந்திய தூதுரக அதிகாரி ஏ.வி. குரு மூர்த்தி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார்.
இந்தியாவில் இருந்து எடுத்துவரப்பட்ட உற்;சவ மூர்த்தி திருவுருவச் சிலை, இந்தியாவின் அயோத்தி நகரின் சரயு நிதியில் பெறப்பட்ட புனித நீர் என்பன ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
ஆலய நிர்வாக சபையினரால் இந்திய இராணுவ தளபதிக்கு அவருடைய வருகையை முன்னிட்டு வழங்கப்படவிருந்த விசேட நினைவுச் சின்னமும், அதிகாரியிடம் வழங்கிவைக்கப்பட்டது.





