பாகிஸ்தான் பிரதமரின் இல்லத்திற்கு அருகே தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்

பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு மிக அருகே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் பாகிஸ்தானில் லாகூர் நகரம் இந்தியப் படைகளின் தாக்குதலால் கிட்டத்தட்ட பந்தாடப்பட்டதாகவும், பெஷாவரில் ஐந்து முறை பெரும் குண்டுச்சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.மேலும், தற்கொலைத் தாக்குதல் மூலம் விமானங்களை வெடிக்கச் செய்யும் முயற்சிகள் நடைபெறலாம் என்பதால் தற்போது இயங்கி வரும் விமான நிலையங்களில் பயணிகளை கூடுதலாக சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்தியா கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.அந்தப் பகுதிகள் தற்போது ராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
நள்ளிரவில் உருவான போர்ச்சூழலை அடுத்து, டெல்லியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறுஅறிவிப்பு வரும் வரை டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.