இந்திய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!
இந்தியா Indian மற்றும் இலங்கை Sri Lankan வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று புது டெல்லியில் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





