இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் தென்னாபிரிக்காவில் சந்திப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸி ஆகியோர் அந்நாட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு வைத்தே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பற்றி கலந்துரையாப்பட்டது.
இந்தோ – பசுபிக் பாதுகாப்பு உட்பட மேலும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டுள்ளன.
“ ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ{டன் மிகச் சிறந்த சந்திப்பு நடந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த இணங்கினோம்.
பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பற்றி பேசினோம். உறவுகள் மேலும் வளர மகத்தான சாத்தியக்கூறுகள் உள்ளன.
விவாதிக்கப்பட்ட பிற துறைகளில் கல்வி, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் பலவும் அடங்கும்.” என்று மேற்படி சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தள பதிவில் இந்திய பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.





