செய்தி விளையாட்டு

மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணி

சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது.

இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

நிதானமாக விளையாடி வந்த கில் சாட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கில் தூக்கி அடித்த பந்தை சூப்பர் மேன் போல பறந்து பிலிப்ஸ் பிடித்தார்.

அடுத்ததாக களமிறங்கிய கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் கே.எல்.ராகுல் – ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் 49 ஓவர் முடிவில் 254 ரன்கள் அடித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்தியா அசத்தியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!