ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா
2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அந்தவகையில்,பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான T20 போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 4.5 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 52 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இடைவிடாது மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா(Abhishek Sharma) 23 ஓட்டங்களும் சுப்மன் கில்(Shubman Gill) 29 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
தொடரின் நாயகனாக அபிஷேக் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.




