பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே இந்தியா ஆதரிக்கும் – மோதல் குறித்து மோடி கருத்து
உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்படுவதையே இந்தியா ஆதரித்து வந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில், கனேடிய பிரதமர் மார்க் கார்னி உடன் இணைந்து , மத்திய கிழக்கில் நிலவும் மோதல் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோதல்களை அமைதியான முறையில் தீர்க்கும் நிலைப்பாட்டை இந்தியா நீண்ட காலமாக பின்பற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிர சிந்தனைகள் போன்றன உலகம் முழுவதற்கும் பெரும் சவால்களாக உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.
இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு உலக அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்ய நாடுகளுக்கு இடையில் நெருக்கமான
ஒத்துழைப்பு அவசியம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.




