இலங்கையுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் – மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்த சந்தோஷ் ஜா
இயற்கை இடர்கள் காரணமாக இலங்கை மக்கள் சந்தித்துள்ள பெரும் துயரத்தில் பங்கேற்று அவர்களுக்கு உதவிகளை வழங்கிவரும் இந்தியாவுக்கு மகாநாயக்க தேரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இதன்போதே மகாநாயக்க தேரர்கள் இவ்வாறு தமது நன்றிகளை தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர், இலங்கை ஏதேனும் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உடனடியாகச் செயற்பட்டுத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது குறித்துத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
இலங்கைக்கு உதவி தேவைப்படும் இந்தத் தருணத்தில் இந்தியா மிகுந்த அக்கறையுடன் தலையிட்டுத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்தார்.






