தமிழக வம்சாவளி வீரருடன் இந்தியா வரும் நியூசிலாந்து ; யார் இந்த ஆதித்ய அசோக்?
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளை குஜராத்தின் பரோடா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதித்ய அசோக் இடம்பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த ஆதித்ய அசோக், தனது 4 வயதிலேயே குடும்பத்துடன் நியூசிலாட்டிற்கு இடம்பெயர்ந்தவர்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 2020 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார்.
2023 இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், இதுவரை 2 ஒருநாள் மற்றும் ஒரு T20 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
தனது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக அவர் விளையாடவுள்ளமை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





