செய்தி விளையாட்டு

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்காக 18 போட்டிகளில் விளையாடும் இந்தியா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நியூசிலாந்து சாம்பியன் பட்டம் பெற்றது.

21-23-ல் நடைபெற்ற 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இந்திய அணி இந்த 2 தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை இழந்தது.

3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

ஜூன் 11ந்தேதி முதல் 15ந்தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கிறது.

இந்திய அணி தொடரில் 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை தவறவிட்டது.

2025-27-ம் ஆண்டுக்கான 4வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 18 டெஸ்டில் விளையாடுகிறது. ஜூன்-ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று இந்திய அணி 5 டெஸ்டில் பங்கேற்கிறது.

இதோடுதான் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீசுடன் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுடன் உள்ளூரில் 2 டெஸ்டில் ஆடுகிறது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று 2 டெஸ்டிலும், அக்டோபர்-டிசம்பர் மாதம் நியூசிலாந்து சென்று 2 டெஸ்டிலும் பங்கேற்கிறது.

இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்டிலும் ஆடுகிறது. சொந்த மண்ணில் இந்த தொடர் நடைபெறும்.

(Visited 47 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி