இந்தியா: நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் எடுத்த இளம்பெண்… அடுத்து நடந்த விபரீதம்!
ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார்.
பயணங்களில் ஈடுபாடு கொண்டவரான 27 வயதான ஆன்வி கம்தார் மும்பையில் உள்ள பள்ளத்தாக்கின் நுனியில் நின்று காணொளி எடுத்தபோது கால் தவறி 300 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாகப் பலியானார்.
மும்பையின் முலுண்ட் பகுதியில் வசித்து வந்த ஆன்வி கம்தார், ‘குளோகல் ஜர்னல்’ என்ற பெயரில் உள்ள இன்ஸ்டகிராம் பக்கத்தில் 274,000 க்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள். பட்டயக் கணக்காளரான ஆன்வி டிலாய்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜூலை 16ஆம் திகதி மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் மங்கானில் புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சியை காணொளி எடுப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் சூழலை தனது கைப்பேசியில் பதிவு செய்யும்போது பள்ளத்தாக்கின் நுனியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். அவரது நண்பர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, காவல்துறையினரும் உள்ளூர் மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, ஆன்வியை மீட்டு அருகில் உள்ள மாங்கன் தாலுகா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.