நேட்டோவின் கருத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான உரையாடல் குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவின் கருத்துக்களை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது.
இதுபோன்ற எந்த விவாதமும் இதுவரை நடக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, நேட்டோ தலைமை தனது அறிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் வரி நடவடிக்கைகளுக்குப் பிறகு ரஷ்யாவின் போர் உத்தி குறித்து பிரதமர் மோடி புட்டினிடம் விளக்கம் கோரியதாக ரூட் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த அறிக்கை உண்மைக்கு புறம்பானது மற்றும் முற்றிலும் அடிப்படையற்றது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
பொது அறிக்கைகளை வெளியிடும்போது நேட்டோவின் உயர் தலைமை துல்லியத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.





