விளையாட்டு

உலக லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியை புறக்கணித்த இந்தியா: பைனலில் பாகிஸ்தான்

முன்னாள் நட்சத்திர வீரர்களை கொண்ட 6 சாம்பியன்ஸ் அணிகள் பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஆனால், பஹல்காம் தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகளை பாகிஸ்தான் உதவியது உறுதி செய்யப்பட்டதால், அவர்களுடனான உறவை முற்றிலும் இந்தியா முறித்து கொண்டது. இதனால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடாது என்று பிசிசிஐ தெரிவித்தது.

இந்த சூழலில், ஜூலை 20ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 4வது லீக் ஆட்டம் நடைபெற இருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோத விருப்பமில்லை. குறிப்பாக, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட இந்திய வீரர்கள், பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என்று அறிவித்தனர். இதனால் ஆட்டம் கைவிடப்பட, இரு அணிகளுக்கும் தலா ஒரு வெற்றிப் புள்ளி வழங்கப்பட்டன. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான் தான் ஆடிய எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வென்றது. எனவே, 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடத்தது. தென் ஆப்ரிக்கா (8), ஆஸ்திரேலியா (5), இந்தியா (3) புள்ளிகள் என முறையே அடுத்த 3 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் முதல் அரையிறுதியில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தானும், 4வது இடம் பிடித்த இந்தியாவும் நேற்று பிர்மிங்காமில் மோத வேண்டியிருந்தது. ஆனால் இந்தியா மீண்டும் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்து விட்டது. எனவே, முதல் அரையிறுதியை கைவிடுவதாக போட்டி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலிய அணிகளில் வெற்றிப் பெறும் அணி, நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்க்கொள்ளும்.

* தொடருமா? விலகல்
தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுடன் 2007ம் ஆண்டு முதல் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை. ஐசிசி மற்றும் சர்வதேச தொடர்களில் மட்டுமே இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதி வந்தன. அதுவும் இந்த போட்டிகள் எல்லாம் இந்தியா, பாகிஸ்தான் இல்லாமல் பொதுவான நாடுகளில் மட்டும் நடந்தன. இந்நிலையில் செப்.9ம் தேதி ஐக்கிய அரபு அமீரேட்சில் ஆசிய கோப்பை ஆண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் செப்.14ம் தேதி மோத வேண்டி உள்ளது. இலங்கையில் செப்.30ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி பெண்கள் உலக கோப்பையிலும் இந்தியா-பாகிஸ்தான் அக்.5ம் தேதி களம் காண வேண்டி இருக்கிறது. முன்னாள் வீரர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியை புறக்கணித்தது போல் இந்த 2 கோப்பைகளையும் இந்தியா புறக்கணிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

* ஜூனியர் உலகக்கோப்பை ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய வரும் பாக். அணி
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடக்கிறது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விசா விண்ணப்பங்களை பாகிஸ்தான் அணி சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
Skip to content