சீதை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து வரும் புனித நீர்
சீதை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக இந்தியாவின் சரயு கங்கையின் புனித நீர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதச் சடங்குகளுக்காக சரயு கங்கை நீரையும், சீதா தேவியின் சிலையையும் அர்ப்பணிக்கக் கோரி இலங்கைப் பிரதிநிதிகள் உத்தரப் பிரதேச அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மதச் சடங்குகளுக்காக இலங்கைப் பிரதிநிதிகள் கடிதம் அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநில அரசின் உத்தரவின்படி, சரயு கங்கையின் தூய்மையான நீரை இலங்கைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சீதை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மே மாதம் 19ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மத மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை எளிதாக்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.