இந்தியா செய்தி

சீக்கிய பிரிவினைவாத தலைவரின் மரணம் குறித்த தகவல்களை கோரும் இந்தியா

சீக்கிய பிரிவினைவாதத் தலைவரின் மரணம் குறித்து ஏதேனும் தகவலை அளிக்குமாறு கனடாவிடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இது தொடர்பாக ஏதேனும் சிறப்புத் தகவல்கள் இருந்தால் விசாரிக்கத் தயார் என்றார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற இந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு கோவிலின் முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, இந்த கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பகமான தகவல் இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி