இந்தியா

இந்தியா – மணிப்பூரில் பெரிய அளவிலான நடவடிக்கையில் 328 ஆயுதங்களை மீட்ட காதுகாப்பு படையினர்

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை, மோதல் சம்பவங்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஆயுதக் குவியல் சிக்கியுள்ளது.

நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள், தோட்டாக்கள், சக்தி வாய்ந்த வெடிபொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பெரிய சதிச்செயல் தடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர் அங்குச் சென்று அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதே வேளையில், மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் நவீன ஆயுதங்கள் பெருங்குவியலாகக் கைப்பற்றப்பட்டன.

பல்வேறு வகை துப்பாக்கிகள், வெடிபொருள்கள், ஒரு கையெறிகுண்டு என மொத்தம் 328 ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இந்த வன்முறைச் சம்பவங்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தில் தற்போது அதிபர் ஆட்சி அமலில் உள்ளது. எனினும், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தபாடில்லை.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே