ஆயுத இறக்குமதியில் 2ஆம் இடத்தில் இந்தியா!
உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் Stockholm International Peace Research Institute
ஆய்வு அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையில் போர் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பதற்றமான சூழலே இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை குவிப்பதற்கு பிரதான காரணமென கூறப்படுகின்றது.
கடந்த 2016- 2020 கால கட்டத்தை விட, 2021- 2025 கால கட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ஆயுதங்கள் தயாரிப்பது அதிகரித்துள்ளதால் இறக்குமதி ஓரளவு குறைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்தே இந்தியா 40 சதவீத ஆயுதங்களை கொள்வனவு செல்கின்றது. எனினும், ரஷ்யாமீதான தடைகளால் கொள்வனவு வெகுவாக குறைவடைந்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலிடமிருந்து இந்தியா அதிக ஆயுங்களை கொள்வனவு செய்துவருகின்றது எனவும் மேற்படி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





