இருளில் மூழ்கிய இந்தியா : காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனமழை காரணமாக தென்னிந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று (16.10) மூடப்பட்டன.
நாட்டின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்களான சென்னை மற்றும் பெங்களூரு ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் அடங்கும்.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு அமுற்படுத்தப்பட்டதாகவும், விமானங்கள் இரத்து செய்யப்பட்ட நிலையில் பயண இடையூறுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நாளைய தினம் வரை (வியாழன் வரை) தெற்கு பகுதியில் மணிக்கு 60 கிமீ (37 மைல்) வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(Visited 4 times, 1 visits today)