இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அட்டாரி எல்லையை மூட உத்தரவு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த அதிர்ச்சியூட்டும் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பஞ்சாபில் அமைந்துள்ள இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அட்டாரி எல்லை இரவு முதல் மூடப்படவுள்ளது.
அட்டாரி எல்லையை மூடுவது மட்டுமல்லாமல், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் சார்க் விசாக்களை வழங்க மறுப்பது ஆகியவை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளில் அடங்கும் என்று பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.
“அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும். செல்லுபடியாகும் ஒப்புதல்களுடன் கடந்து வந்தவர்கள் மே 01, 2025 க்கு முன்பு அந்த வழியாகத் திரும்பலாம்” என்று கூட்டத்திற்குப் பிறகு வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.