விளையாட்டு

பாகிஸ்தானை தோற்கடிக்கும் முனைப்பில் இந்தியா

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதற்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோத உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடாததால்,

ஹைபிரிட் முறையில் துபையில் இந்திய ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய-பாக். ஆட்டம்:

இந்நிலையில் துணைக் கண்டத்தின் பரம வைரி அணிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இரு அணி வீரா்களும் இதற்காக சனிக்கிழமை தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்டனா்.

உற்சாகத்தில் இந்தியா: முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

துவண்டுள்ள பாகிஸ்தான்: ஆனால் தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு துவண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி ஆட உள்ளது.

2017-இல் பாகிஸ்தான் சாம்பியன்: இரு அணிகளும் கடந்த 2017-இல் லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் மோதின. அப்போது அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது. மேலும் சாம்பியன் பட்டத்தையும் வசப்படுத்தியது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு பெரிய சறுக்கலாக அமைந்தது.

கடந்த 8 ஆண்டுகளில் இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பல்வேறு இளம் வீரா்கள் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

துபையில் இந்திய அணிக்கு சாதகங்கள் அதிகம் உள்ளது. அங்குள்ள மைதான சூழ்நிலை இந்திய வீரா்களுக்கு நன்கு பழக்கமான நிலையில், பாக். அணியினா் 2 நாள்களுக்கு முன்னா் தான் அங்கு சென்றனா்.

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சா்மாவின் பேட்டிங் கவலை தந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தாலும் சொற்ப ரன்களுக்கு அவுட்டானாா். எனினும் ஷுப்மன் கில்லுடன் இணைந்து வலுவான அடித்தளம் இடுவதற்கு ரோஹித் ஆட்டம் உதவியது.

சொதப்பும் விரோட் கோலி: மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியின் பாா்ம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது டௌனில் இறங்கும் அவா் ரன்களை குவிக்கத் தவறி வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் ஷ்ரேயஸ் ஐயா், கே.எல். ராகுல், ஹாா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், ஜடேஜா ஆகியோரின் பேட்டிங் நம்பிக்கை தருகிறது.

பந்துவீச்சிலும் முகமது ஷமி மீண்டும் பழைய பாா்முக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹா்ஷித் ராணா, ஸ்பின்னா்கள் குல்தீப், ஜடேஜா, அக்ஸா் படேல் ஆகியோா் வலிமையான கூட்டணியாக உள்ளனா்.

தடுமாறும் பாக். பேட்டிங்: பாகிஸ்தான் அணியில் பேட்டிங் கவலை தரும் வகையில் உள்ளது. மூத்த வீரா் பாபா் ஆஸம் 90 பந்துகளில் 64 ரன்களை எடுத்தது கடும் விமா்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபனா் ஃபாக்கா் ஸமான் காயத்தால் நீக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக இமாம் உல் ஹக் களமிறங்கலாம். மிடில் ஆா்டா் பேட்டா் குஸ்தில் ஷா நம்பிக்கை தரும் வகையில் ஆடுகிறாா். பௌலிங்கில் ஷாஹின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஆஃப் பிரேக் பௌலா் ஆகா சல்மான், நஸீம் ஷா ஆகியோா் சிறப்பாக பந்துவீசினால் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

அரையிறுதி முனைப்பில் இந்தியா: முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இந்த ஆட்டத்தில் வென்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். அதே நேரம் பாகிஸ்தான் அணி தோல்வியால் குரூப்பில் கடைசி இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தோற்றால் போட்டியில் இருந்தே வெளியேற்றப்படும்.

நேருக்கு நோ்:

இந்தியா வெற்றி 57 ஆட்டங்கள்

பாகிஸ்தான் வெற்றி 73 ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்:

இந்தியா=பாகிஸ்தான்

இடம்: துபை

நேரம்: பிற்பகல் 1.30.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ