இந்தியா செய்தி

இந்தியா: பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம்

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் நீடிக்கவோ விலகவோ நிர்வாகிகளிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன்; 3 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

1. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று முதல் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தனது உறவை முறித்துக்கொண்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது.

2.ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

3.எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது தற்போது இல்லை. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி