இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி – தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட் (Adelaide) மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா (Rohit Sharma) 73 ஓட்டங்களும் ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer) 61 ஓட்டங்களும் அக்சார் படேல் (Axar Patel) 44 ஓட்டங்களும் குவித்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி (Virat Kohli) ஓட்டங்கள் எதுவும் இன்றி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.
இதனை தொடர்ந்து, 265 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் மத்தியூ சோர்ட் (Matthew Short) 74 ஓட்டங்களும் கூப்பர் கன்னொலி (Cooper Connolly) 61 ஓட்டங்களும் பெற்றனர்.
இன்றைய வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.