இந்தியா

இந்தியா: நிலத் தகராறு… போராட்டம் நடத்திய பெண்களை உயிருடன் புதைத்த சம்பவம்!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சாலையில் போராட்டம் நடத்திய இரு பெண்கள் மீது அவர்கள் மண்ணில் புதையும் அளவுக்கு லொரி மூலம் மண் கொட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்த மாவட்டத்தில் உள்ள ஹினோட்டா ஜோரோட் என்ற கிராமத்தில் மம்தா பாண்டே, ஆஷா பாண்டே ஆகிய இரு பெண்களுக்கு உறவினர்களுடன் நிலத் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் அந்த நிலத்தில் உறவினர்கள் சாலை அமைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்கும் பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட மண்ணைச் சுமந்து நின்ற லொரியின் முன் அமர்ந்து அந்த இரு பெண்களும் போராட்டம் நடத்தினர். அவர்கள் எதிர்பாராத வகையில் லொரியில் இருந்த மண் முழுவதும் அந்தப் பெண்கள் மீது கொட்டப்பட்டது.

Madhya Pradesh: 2 women partially buried in Rewa during land protest, 1  accused arrested - India Today

இதில், அவர்கள் கிட்டத்தட்ட முழுமையாக மண்ணில் புதைந்தனர். அருகில் இருந்த கிராம மக்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் மண்ணில் இருந்து மீட்கப்படும் காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே