தூய்மையில் பின்தங்கிய இந்தியா!! ஐரோப்பிய நாடுகள் முன்னிலை
தூய்மையில் இந்தியாவின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். உலக அளவில் தூய்மையில் ஐரோப்பிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு EPI மதிப்பெண் 77.9% உடன் டென்மார்க் உலகின் தூய்மையான நாடு. கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர்வாழ் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் போன்ற பல துறைகளில் டென்மார்க் 100% புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
கிரீன்ஹவுஸ் வாயுக்களுக்கு எதிராக செயல்படுவதன் மூலமும், காலநிலை மாற்றத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதன் மூலமும் டென்மார்க் தனது நிலையை மேலும் மேம்படுத்தியுள்ளது.
77.7% EPI மதிப்பெண்ணுடன் பிரித்தானிய இரண்டாவது இடத்தில் உள்ளது. 67.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் இது மிகவும் மரியாதைக்குரிய மதிப்பெண் ஆகும். குடிநீர், சுகாதாரம் மற்றும் மாசுபாடு ஆகியவற்றில் முழு மதிப்பெண்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
பின்லாந்து 76.5% மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டின் எரிசக்தித் தேவையில் 42 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து வருகிறது. குடிநீர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பிலும் நாடு முன்னணியில் உள்ளது.
இருப்பினும், சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் வெறும் 18.9% மதிப்பெண்களுடன், இந்தியா உலகின் கீழ்நிலையில் 180வது இடத்தில் உள்ளது.