“இந்தியா உலகை பாதுகாப்பானதாக மாற்றுகிறது” – உர்சுலா வான் டெர் லேயன்!!
இந்தியா” உலகை மேலும் “நிலையான, வளமான மற்றும் பாதுகாப்பானதாக” மாற்றுகிறது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) இன்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வான் டெர் லேயன் (Ursula von der Leyen) , குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.
அவருடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் (Antonio Costa) சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் இந்த விஜயம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையான, வளமான மற்றும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. மேலும் நாம் அனைவரும் பயனடைகிறோம்,” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளைய தினம் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் முக்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.




