இலங்கை

மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் இந்தியா – எலோன் மஸ்க் வெளியிட்ட தகவல்

இந்தியா இந்த வார இறுதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாட்டு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1,425,775,850ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்திய மக்கள்தொகை எண்ணிக்கை சீனாவைவிட அதிகமாகும் என்று முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.

70 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் ஆசிய நாடுகளில் உள்ளனர்.

இதற்கிடையே, Twitterஇன் உரிமையாளர் எலோன் மஸ்க் நாட்டின் மக்கள் புள்ளிவிவர ஆய்வு அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என நம்புவதாகக் கூறியுள்ளார்.

இது விதியே! என ஆக அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியா குறித்து அவர் Twitterஇல் பதிவிட்டிருந்தார்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!