இந்தியா

இந்தியா – பள்ளியில் சேர்க்க முடியாததால் விரக்தி… மகளை கிணற்றில் தள்ளி விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!

மகாராஷ்டிராவில் 26 வயது இளம்பெண் தனது இரு குழந்தைகளையும் CBSE பள்ளியில் சேர்க்க முடியாத விரக்தியில், 5 வயது பெண் குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிராவில், மாலேகானை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (26). இவருக்கு ஒரு மகன், மகள் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது மகனையும், மகளையும் CBSE பள்ளியில் சேர்க்க பாக்யஸ்ரீ விரும்பினார். ஆனால், அத்தகைய பள்ளி கட்டணம் இவர்களின் குடும்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்துள்ளது. இதன் காரணமாக பாக்யஸ்ரீ அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணியளவில், தனது மகளுடன் மற்றொரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றுக்கு சென்ற பாக்யஸ்ரீ, அங்கிருந்து தனது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு வீடியோ கால் செய்து, மகள் சமிக்சாவின் முகத்தை கடைசியாக பார்க்குமாறு கூறிவிட்டு, சிறுமியை கிணற்றில் தள்ளி, அவரும் குதித்தார்.

தகவலறிந்த ஆரத் ஷஹாஜானி காவல் நிலைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் பாக்யஸ்ரீ, சமிக்சா ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டனர்.

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே