இந்தியா

இந்தியா- பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய போர்விமானம்; விமானி மரணம்

குஜராத்திலுள்ள ஜம்நகர் மாவட்டத்தில், திறந்த புல்வெளியில் இந்திய விமானப்படை விமானம் விழுந்ததைத் தொடர்ந்து அதன் விமானிகளில் ஒருவர், பலத்த காயங்களால் உயிரிழந்ததாக விமானப்படை, வியாழக்கிழமை (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளது.

விமானத்திலிருந்து தக்க நேரத்தில் தன்னை வெளியேற்றிய மற்றொரு விமானி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஆகாயப்படை கூறியது.

ஜாகுவார் போர்விமானம், பயிற்சிக்காகப் பறந்துகொண்டிருந்தபோது திடீரென்று சுவர்டா கிராமத்திலுள்ள புல்வெளி ஒன்றின்மீது விழுந்து நொறுங்கியது. புதன்கிழமை இரவு ஏறத்தாழ 10 மணிக்கு அந்தச் சம்பவம் நேர்ந்ததை அடுத்து காவல் துறையினர், அவசரச் சேவைப் பணியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உயிரிழப்புக்காக மிகவும் வருந்துவதாகத் தெரிவித்த இந்திய ஆகாயப்படை, உயிர்நீத்த விமானியின் குடும்பத்திற்குப் பக்கபலமாய் நிற்பதாகத் தெரிவித்தது. திறந்த புல்வெளியில் விழுந்த விமானத்தால் பொதுமக்கள் காயமடையவில்லை.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்துமாறு உத்தரவு இடப்பட்டதாக ஆகாயப்படை கூறியது.

இதற்கு முன்னதாக மே 2023ல், ராஜஸ்தானில் எம்ஐஜி-21 போர்விமானம், ஹனுமன்கார்ஹ் கிராமத்திலுள்ள ஒரு வீட்டின்மீது விழுந்த சம்பவத்தில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்தனர்.

(Visited 41 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே