24 விமான நிலையங்களின் மூடலை மே 15 வரை நீட்டித்த இந்தியா

வட இந்தியாவில் உள்ள பல நகரங்களை பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்க முயன்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 24 விமான நிலையங்களை மூடுவதை மே 10 காலை முதல் மே 15 காலை வரை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்துள்ளது.
மற்ற பங்குதாரர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
மே 15 ஆம் தேதி காலை 5.29 மணி வரை செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானர், ராஜ்கோட், ஜோத்பூர் மற்றும் கிஷன்கர் விமான நிலையங்கள் மே 15 வரை மூடப்படும்.
(Visited 1 times, 1 visits today)