சர்வதேச அரசியலை மாற்றியமைக்கும் இந்திய – ஐரோப்பிய கூட்டணி: பாரிஸில் ஜெய்சங்கர் உரை
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ‘வெய்மர் டிரை ஆங்கிள்’ மாநாட்டில் உரையாற்றிய அவர், ஐரோப்பாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
விரைவில் ஜெர்மனி பிரதமர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய தலைவர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்த உறவு உலகளாவிய ரீதியில் ஒரு புதிய சக்தியாக உருவெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





