இந்தியா

இந்தியா – விபத்தால் ஆத்திரமடைந்து 11 வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்திய உள்ளூர்வாசிகள்

நிலக்கரி ஏற்றிச் சென்ற லொரி கவிழ்ந்து மோட்டார்சைக்கிளை நசுக்கியதில், அதில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.இவ்விபத்து இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், சிங்ரோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) நேர்ந்தது.

அதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பேருந்துகள், லொரிகள் என குறைந்தது 11 வாகனங்களைத் தீவைத்து எரித்தனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை அமைதிப்படுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட அமளியில் காவலர் ஒருவர் காயமுற்றார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் அடங்குவர்.

“விபத்தால் ஆத்திரமடைந்த அவர்கள் பேருந்துகளுக்கும் சரக்கு வாகனங்களுக்கும் தீ வைத்ததுடன் அங்கிருந்த தொழிற்சாலைப் பகுதிக்குள்ளும் நுழைய முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர்,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக உள்ளூர்ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதியில் வன்முறையைத் தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் இறங்கி, வாகனங்களைக் கொளுத்தியோர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.இதனிடையே, நிலக்கரி ஏற்றிச் சென்ற லொரியின் ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் காவல்துறைக் கண்காணிப்பாளர் கத்ரி தெரிவித்தார்.

(Visited 38 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!