விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை டிராவில் முடித்தனர்.

ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சு திட்டங்களை யும் கடும் சிதைவுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்த போட்டியில் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே 2 விக்கெட்களை இந்திய அணி பறிகொடுத்து நம்பிக்கையற்ற நிலையில் இருந்த போதிலும் கே.எல்.ராகுல், ஷூப்மன் கில் ஜோடி அபாரமாக ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தது.

அவர்​களது போராட்ட குணத்தை பின்​பற்றி ஜடேஜா​வும், வாஷிங்​டன் சுந்​தரும் அபார​மாக செயல்​பட்டு ஆட்​டத்தை டிரா​வில் முடிக்க பெரிதும் உதவினர். போட்டி டிரா​வில் முடிவடைந்த போதி​லும் இந்​திய அணி​யின் செயல் திறன் வெற்​றிக்கு நிக​ராக ரசிகர்​களால் கொண்​டாடப்​பட்​டது. இந்​நிலை​யில் கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் போட்டி லண்​டனில் உள்ள கெனிங்​டன் ஓவல் மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது.

இந்த போட்​டி​யில் வெற்றி பெற்​றால் மட்​டுமே டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடி​யும் என்ற நெருக்​கடி​யான சூழ்​நிலை​யில் இந்​திய அணி களமிறங்​கு​கிறது. இந்த தொடரில் முதல் 4 போட்​டிகளுமே கடைசி நாளில் கடைசி செஷன் வரை பரபரப்​பாக இருந்​தது. இதனால் கடைசி டெஸ்ட் போட்​டி​யும் ரசிகர்​களுக்கு விருந்​த​தாக அமையக்​கூடும். யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் கடந்த போட்​டி​யில் ஏமாற்​றம் அளித்​தார். இந்த போட்டி முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது என்​ப​தால் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் அவர், முனைப்பு காட்​டக்​கூடும்.

மான்​செஸ்​டர் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் அரை சதம் அடித்த சாய் சுதர்​சன், 2-வது இன்​னிங்​ஸில் தனது விக்​கெட்டை பொறுப்​பின்றி செயல்​பட்டு இழந்​திருந்​தார். அணி​யில் தனக்​கான இடத்தை தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டுமென்​றால் அவர், சிறப்​பான செயல் திறனை வெளிப்​படுத்த வேண்​டியது அவசி​யம். பந்து வீச்​சில் ஒரு சில மாற்​றங்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது.

தொடரை சமன் செய்​வதற்​கான முக்​கிய​மான போட்டி என்​ற​போ​தி​லும் பணிச்​சுமையை கருத்​தில் கொண்டு ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு ஓய்வு கொடுக்​கப்​படக்​கூடும். அவருக்கு பதிலாக முழு உடற்​தகு​தியை எட்டி உள்ள ஆகாஷ் தீப் களமிறங்​கக்​கூடும். மேலும் அன்​ஷுல் கம்​போஜ் நீக்​கப்​பட்டு அர்​ஷ்தீப் சிங் அல்​லது குல்​தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்​கப்​படக்​கூடும்.

பேட்​டிங்​கில் 4 சதங்​களு​டன் 722 ரன்​கள் வேட்​டை​யாடி உள்ள ஷுப்​மன் கில் மீண்​டும் ஒரு சிறந்த இன்​னிங்ஸை வெளிப்​படுத்​தக்​கூடும். இந்த போட்​டி​யில் ஷுப்​மன் கில் மேற்​கொண்டு 52 ரன்​கள் சேர்த்​தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்​கள் குவித்த இந்​திய வீரர் என்ற சாதனையை படைப்​பார். இந்த வகை சாதனை​யில் சுனில் கவாஸ்​கர் கடந்த 1970-71-ம் ஆண்டு மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான தொடரில் 744 ரன்​கள் குவித்து முதலிடத்​தில் உள்​ளார்.

அதேவேளை​யில் சுனில் கவாஸ்​கரின் மற்​றொரு சாதனையை​யும் ஷுப்​மன் கில் முறியடிக்க வாய்ப்பு உள்​ளது. இந்​திய அணி​யின் கேப்​ட​னாக1978-79-ம் ஆண்டு மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்​கர் 732 ரன்​கள் குவித்​திருந்​தார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்​திய அணி​யின் கேப்​டன் குவித்த அதி​கபட்ச ரன்​களாக இது உள்​ளது. இந்த சாதனையை முறியடிக்க ஷுப்​மன் கில்​லுக்கு மேற்கொண்டு 11 ரன்​களாக தேவை​யாக உள்​ளன.

இதே​போன்று 511 ரன்​கள் குவித்​துள்ள கே.எல்​.​ராகுலிடம் இருந்து சிறப்​பான ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். ஆல்​ர​வுண்​டர்​களாக ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் கடந்த ஆட்​டத்​தில் சதம் விளாசி​யதன் மூலம் மிகுந்த நம்​பிக்​கை​யுடன் செயல்​படக்​கூடும். ரிஷப் பந்த் காயம் காரண​மாக விலகி உள்​ள​தால் அவரது இடத்​தில் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னாக துருவ் ஜூரெல் களமிறங்​கு​வார்.

இங்​கிலாந்து அணி​யில் தோள்​பட்டை காயம் காரண​மாக கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்​ளார். இது அந்த அணிக்கு பின்​னடைவை கொடுக்​கக்​கூடும். பெஸ் ஸ்டோக்​ஸ்​ விளை​யா​டாத​தால்​ ஆலி போப்​ கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்​. மேலும்​ ஜோப்​ரா ஆர்​ச்​சர்​, பிரைடன்​ ​கார்​ஸ்​, லி​யாம்​ ​டாவ்​சன்​ ஆகியோர்​ நீக்​கப்​பட்​டு ஜேக்​கப்​ பெத்​தேல்​, ஜேமி ஓவர்​டன்​, ஜோஷ் டங்​க்​ ஆகியோர் சேர்​க்​கப்​பட்​டுள்​ளனர்​.

வேகங்களுக்கு முக்கியத்துவம்: இங்கிலாந்து அணியின் லெவனில் முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங்க், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கப்படவில்லை. இதனால் ஜோ ரூட்டுடன் ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் சுழற்பந்து வீச்சில் கைகொடுக்கக்கூடும்.

‘ஸ்டோக்ஸ் இல்லாதது இங்கிலாந்துக்கு இழப்பு’: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்கும் விஷயத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் முடிவு எடுப்போம். ஆடுகளம் மிகவும் பசுமையாக உள்ளது. இதனால் அது எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். பென் ஸ்டோக்ஸ் விளையாடாதது இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் பெரிய இழப்புதான். அவர் எப்போது பந்து வீசினாலும், பேட்டிங் செய்தாலும் ஏதேனும் ஒன்றை நிகழச் செய்வார். எனவே அவர்களின் பார்வையில், இது நிச்சயமாக இழப்புதான்.

அர்ஷ்தீப் சிங்கை தயாராக இருக்கும்படி கூறியுள்ளோம். ஆனால், ஆடுகளத்தைப் பார்த்த பிறகே விளையாடும் லெவன் குறித்து முடிவெடுப்போம். தொடரை 2-2 என நாங்கள் நிறைவு செய்தால் சிறப்பானதாக இருக்கும். நாங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும், முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு வெற்றியாளரைத் தீர்மானிப்பது கடினமாக இருந்தது. இந்தத் தொடர் எங்களுக்கு கற்றல் அனுபவத்தை கொடுத்துள்ளது. அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வோம் என்று நம்புகிறேன்” என்றார்.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
Skip to content