இந்தியா

இந்தியா – ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்க ரோபோ வீரர்களைத் தயாரிக்க தீவிரம்

ம​கா​ராஷ்டிர மாநிலம், புனே​யில் உள்ள டிஆர்​டிஓ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அமைப்​பு ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்க மனித இயந்திர வீரர்களைப் (ரோபோ) பயன்படுத்தத் திட்டமிட்டுள்​ளது.

இந்த வீரர்​களைத் தயாரிக்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருக்​கும் டிஆர்​டிஓ விஞ்​ஞானிகள் பேசியபோது, “இந்​திய ராணுவத்​துக்​காக மனிதர்​களைப் போன்று கை, கால்​களு​டன் கூடிய மனித இயந்திர வீரர்​களைத் தயார் செய்​திருக்​கிறோம். அவற்றின் உடல் பகு​தி​யில் இலகுரக ஆயுதங்​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன.

“குண்​டுமழை பொழிந்து கொண்​டிருக்​கும் போர்க்​களத்​தில் முன்னேறிச் செல்வது, கண்​ணி வெடிகள், வெடிகுண்டுகளைச் செயலிழக்​கச் செய்​வது, ஆபத்​தான ரசாயனங்​களைக் கையாளுவது, ஆயுதங்​களை இழுத்து வரு​வது உள்ளிட்ட கடின​மான பணி​களை மனித இயந்திர வீரர்கள் மூலம் செய்யத் திட்​ட​மிட்டு உள்​ளோம்,” என்று​ தெரி​வித்​தனர்​.

இதுகுறித்து, டிஆர்​டிஓ அமைப்பின் பொறி​யியல் பிரிவுத் தலை​வர் டலோலி கூறுகையில், “போர்க்​களத்திலும் ராணுவ நடவடிக்​கை​களின்​போதும் வீரர்​களின் உயிரிழப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாகி விடுகிறது.

“இந்த உயி​ரிழப்பைத் தடுக்க மனித இயந்திர வீரர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்​காக மனிதர்களைப் போன்ற ரோபோ வீரர்களைத் தயார் செய்​யும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்​டிருக்​கிறோம்.

“கடந்த 4 ஆண்​டு​களாக மாதிரி மனித இயந்திர வீரர்களைத் தயார் செய்​திருக்​கிறோம். இவை கடின​மான மலைப்​பகு​தி​களிலும் எந்தப் பிரச்சினையுமின்றி எளி​தாக ஏறிச்செல்​லும்.

“நாம் பிறப்​பிக்​கும் உத்​தர​வு​களை ஏற்றுச் செயல்படும் வகையில் மனித இயந்திரக் கருவிகளில் புதிய தொழில்​நுட்​பங்​களைப் புகுத்தி வரு​கிறோம்,” என்று தெரி​வித்​தார்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!