இந்தியா : டெல்லியின் காற்றின் தரம்: இரசாயனமாக மாறிய யமுனை நதி!
வெள்ளிக்கிழமை நிலவரப்படி 293 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் (AQI) இந்தியாவின் நான்காவது மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி நீடித்தது. ஞாயிற்றுக்கிழமைக்குள் காற்று மாசுபாடு மோசமாகி ‘மிகவும் மோசமான’ அளவை எட்டக்கூடும் என்று இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐஐடிஎம்) கணித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 293 ஆக பதிவாகியுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்ள நகரமான பஹதுர்கர், AQI 314 உடன் நாட்டிலேயே மோசமான காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளது. ஹரியானாவில் உள்ள கைதல் 306 AQI இன் ‘மிகவும் மோசமான’ AQI ஐயும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் யமுனை நதியில் பனிப்படலம் போன்று இரசாயனங்கள் நுரைகளாக உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீரில் உருவாகியுள்ள நுரையில் அமோனியாவின் அளவு அதிகமாக உள்ளதால் மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.