இந்தியா செய்தி

கடந்த மாதம் சரக்கு மற்றும் சேவை வரியாக $20.64 பில்லியன் வசூலித்த இந்தியா

செப்டம்பரில் இந்தியா மொத்த சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) 1.73 டிரில்லியன் ரூபாய் ($20.64 பில்லியன்) வசூலித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (செப்டம்பரில்) மொத்த வசூல் 1.62 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் செப்டம்பரில் CGST, SGST, IGSD மற்றும் செஸ் வரி ஆகிய அனைத்தும் அதிகரித்து இருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றது.

2024ம் ஆண்டில் ஒட்டு மொத்த GST வசூல் 9.5 சதவீதம் அதிகரித்து, 10.9 லட்சம் கோடியாக உள்ளது. இது, 2023ம் ஆண்டில் 9.9 லட்சம் கோடியாக இருந்தது.

நடப்பு ஆண்டில் ஏப்ரலில் அதிக அளவாக 2.10 லட்சம் கோடி வசூலாகி இருந்தது. இதேபோன்று, 2023-24 நிதியாண்டில் மொத்த GST வசூல் 20.18 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.7 சதவீதம் அதிகம் ஆகும்.

நடப்பு ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான சராசரி மாத வசூல், 1.68 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தின ஆண்டில் 1.5 லட்சம் கோடியாக இருந்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!