பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய இந்தியா

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு கடந்த 24 ஆம் திகதி மூடியது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இந்த நிலைமை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மோதலுக்கு வழிவகுத்தது, அது இப்போது போர் நிலைக்கு அதிகரித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியப் படைகள் பாகிஸ்தானைத் தாக்க அனுமதி அளித்தார்.
புது தில்லியில் நடைபெற்ற சிறப்பு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த விடயம் இடம்பெ்றறது.
(Visited 1 times, 1 visits today)