இந்தியா

இந்தியா : திருமணத்தின் பேரில் இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் – சட்டத்தில் திருத்தம் அவசியம்!

திருமண பலாத்காரத்தை குற்றமாக்கக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசாங்கம் எதிர்த்துள்ளது.

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள இந்திய உள்துறை அமைச்சகம், ஒரு ஆணுக்கு தனது மனைவியை வலுக்கட்டாயமாக பாலுறவு கொள்ள அடிப்படை உரிமை இல்லை”, ஆனால் திருமணமான பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்க போதுமான சட்டங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

திருமணத்திற்குள் பாலியல் பலாத்கார குற்றத்திற்காக ஆணுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்று பிரித்தானிய காலத்து சட்டத்தில் திருத்தம் செய்ய கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்தியாவில் திருமணத்திற்குள்ளான வன்முறை அதிகமாக உள்ளது – சமீபத்திய அரசாங்க கணக்கெடுப்பின்படி, 25 பெண்களில் ஒருவர் தங்கள் கணவர்களால் பாலியல் வன்முறையை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 1860 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-வது பிரிவைத் தடை செய்யக் கோரி சமீபத்திய ஆண்டுகளில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த சட்டத்தின் படி ஒரு பெண் மைனராக இல்லாவிட்டால் தனது சொந்த மனைவியுடன் பாலுறவு கொள்வதை சட்டப்படி வலியுறுத்துகின்றது.

இதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்  இந்திய அரசாங்கம், மதக் குழுக்கள் மற்றும் ஆண்கள் உரிமை ஆர்வலர்கள், பாலுறவுக்கான சம்மதம் திருமணத்தில் “மறைமுகமாக உள்ளது” என்றும், மனைவி அதைத் திரும்பப் பெற முடியாது என்றும் சட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டத்தை எதிர்த்துள்ளனர்.

இத்தகைய வாதம் நவீன காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், யார் செய்தாலும் கட்டாயப் பாலுறவு கற்பழிப்பு என்றும் பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகளும் திருமண ரீதியான கற்பழிப்பு குற்றமாக கருத இந்தியா மறுப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளன.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!