முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/zeb.jpg)
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா களமிறங்கினர்.
இதில் ஜெய்ஸ்வால் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதனை தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஷ்ரேயாஸ் 36 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அக்சர் படேல்- கில்லுடம் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரை சதம் விளாசினார். அக்சர் படேல் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.
அக்சர் படேல் 52 ரன்னிலும் சுப்மன் கில் 87 ரன்னிலும் கேஎல் ராகுல் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 38.4 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.