துருக்கி, அஸர்பைஜானுடனான வர்த்தகத்தை முழுமையாகப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவிப்பு

துருக்கி, அஸர்பைஜானுடனான வர்த்தகத்தை முழுமையாகப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
துருக்கி மற்றும் அஸர்பைஜான் நாடுகளுடன் எந்தவிதமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேற்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இதனை அறிவித்துள்ளது.
இந்த இரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்ததால் இந்த நாடுகளுடன் வர்த்தகத்தை முழுமையாக புறக்கணிப்பதாகவும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
மேலும் ஆசியாவின் மிகப்பெரிய பழம் மற்றும் காய்கறி மொத்த சந்தையான டெல்லி ஆசாத்பூர் மண்டி துருக்கியிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)