இந்தியா: அதிபர் தாக்கியதால் கண் பார்வையை இழந்த 3ம் வகுப்பு மாணவி

இந்தியாவில் ஒரு தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இதனால் ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும், பள்ளி அதிபர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை அதிகாரி தெரிவித்தார்.
போக்பூர் மித்தோனி தொடக்கப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் தாயார் ஜோதி காஷ்யப், அதிபர் கீதா கரால் மீது மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்ததை அடுத்து, அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தனது புகாரில், அதிபர் ஏற்படுத்திய கடுமையான காயங்களால் தனது மகள் ஹிமான்ஷி பார்வை இழந்ததாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அதிபர் கீதா கரல் குற்றச்சாட்டுகளை மறுத்து, ஹிமான்ஷிக்கு ஏற்கனவே பார்வை குறைபாடு இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.
“ஒரு வகுப்புத் தோழி பெனாசீர் தனது வேலையை முடித்துக்கொண்டிருந்தபோது, தற்செயலாக ஹிமான்ஷியின் முகத்தில் முழங்கையால் தாக்கியதால், அவரது கண்ணில் வீக்கம் ஏற்பட்டபோது இந்த காயம் ஏற்பட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.