இந்தியா

இந்தியா – 2 ஆண்டுகளாக தந்தை உட்பட உறவினர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி!

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது தொடர்பான நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 13 வயது சிறுமி சொன்ன தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது 40 வயதுடைய தனது தந்தை, மாமா மற்றும் 20 வயதுடைய உறவினர் மூவரும் இரண்டு ஆண்டுகளாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி கூறினார். அவரது குடும்பத்தாரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொலிஸாரை அதிர்ச்சியடைய செய்தது.

இதுதொடர்பாக 13 வயது அளித்த புகாரின் பேரில், புனே நகர எல்லைக்கட்பட்ட காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது தந்தை, மாமா மற்றும் உறவினர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்துடன், பலாத்காரம், குற்றவியல் மிரட்டல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் தொடர்பான பல்வேறு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழு் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, “கடந்த ஜூலை 2022 மற்றும் ஜூன் 2024- ஆண்டுகளுக்கு இடையில் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சிறுமிக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே