யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரிப்பு: மாவட்ட செயலாளர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
”சட்ட வைத்திய அதிகாரிகளின் தகவல் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் பேசி நடவடிக்கைக்கு வலியுறுத்தியுள்ளேன்.
சில இடங்களை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
(Visited 10 times, 1 visits today)