தென் சீனக் கடலில் அதிகரிக்கும் பதற்றம் : வெறும் கைகளுடன் போராடிய பிலிப்பைன்ஸ்!
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் ஆயுதமேந்திய சீன கடலோரக் காவல்படையை எதிர்த்துப் போரிடுவதற்கு பிலிப்பைன்ஸ் வீரர்கள் தங்கள் “வெறும் கைகளை” பயன்படுத்தியதாக பிலிப்பைன்ஸ் இராணுவத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஆயுதப் படைகளின் தலைவரான ஜெனரல் ரோமியோ பிரவுனர் ஜூனியர், சீனப் பணியாளர்கள் எட்டுக்கும் மேற்பட்ட மோட்டார் படகுகளில் ஏறியதாகவும், கப்பல்கள் பல முறை மோதியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலை கடற்கொள்ளையுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், சீனர்கள் ஆயுதங்களை ஏந்தியதாகவும், இரண்டாவது தாமஸ் ஷோலின் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் பிராந்திய புறக்காவல் நிலையத்திற்கு உணவு, துப்பாக்கிகள் மற்றும் பிற பொருட்களை மாற்றுவதைத் தடுக்க முயன்றதாகவும் கூறினார்.
இரு நாடுகளுக்கிடையேயான பகைமைகள் ஷோல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளன.
அங்கு பிலிப்பைன்ஸ் BRP சியரா மாட்ரே கப்பலை 1999 இல் தரையிறக்கி ஒரு புறக்காவல் நிலையத்தை உருவாக்கியது.