கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம் : இராணுவ பிரிவுக்கு விசேட உத்தரவு பிறப்பித்த வடகொரியா!
தென் கொரியா மீதான தாக்குதல்களை தொடர வடகொரியாவின் முன்னணி இராணுவ பிரிவுகள் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பியோங்யாங்கில் ட்ரோன்களை பறக்கவிட்டு துண்டு பிரசூரங்கள் விநியோகிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென் கொரியா ட்ரோன்களை அனுப்பியதா என்பதை உறுதிப்படுத்த மறுத்துள்ளது, ஆனால் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் வட கொரியாவை கடுமையாக தண்டிப்பதாக எச்சரித்தது.
இந்த மாதம் மூன்று முறை பியோங்யாங்கில் பிரச்சார துண்டுப் பிரசுரங்களை வீசுவதற்கு தென் கொரியா ஆளில்லா விமானங்களை ஏவியதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் அது மீண்டும் நடந்தால் வலிமையுடன் பதிலளிப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)