இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரம்!
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 44 பேர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு பிரயோகங்களில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பழிவாங்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.





