இலங்கையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பாவனை : நெருக்கடி நிலை குறித்து எழுந்துள்ள கவலை!
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) அதிகரித்து வரும் உலகளாவிய பிளாஸ்டிக் கழிவு நெருக்கடி குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி 2000 இல் 156 மில்லியன் டன்களிலிருந்து 2019 இல் 353 மில்லியன் டன்களாக இருமடங்காக அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த கழிவுகளில் 40%, நுகர்வோர் பொருட்கள் 12% ஆடை மற்றும் ஜவுளி பொருட்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
இலங்கையானது வருடாந்தம் சுமார் 500,000 தொன் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் பொருட்களை பிரதானமாக உள்நாட்டு பாவனைக்காக இறக்குமதி செய்வதன் மூலம் நெருக்கடிக்கு பங்களிக்கிறது.
உலகளாவிய மற்றும் தேசிய அளவில் நிலையான தீர்வுகளின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.





